சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் சிற்பிகளின் வரலாறு தனிமனித வாழ்க்கை வரலாறாக மட்டும் அமைவதில்லை. அது சமுதாயத்தின் சமகால வரலாறாக அமையும். அந்த வகையில் 1969 முதல் 1977 தொடக்கம் வரையுள்ள தமிழக வரலாறாகவும், 45 முதல் 53 வயது வரையிலான கலைஞரின் வாழ்க்கை வரலாறாகவும் இந்நூல் அமைந்துள்ளது.